புரட்டாசி மாத மகிமை: சுபைடர் நாதரும், மகாசக்தி தாயார்களும் அருளும் புண்ணிய காலம்

தெய்வீகமும், பக்தியும் மணம் வீசும் மாதமான புரட்டாசி, இறை வழிபாட்டிற்கும், முன்னோர் வழிபாட்டிற்கும் (மகாளய பட்சம்), மற்றும் ஒன்பது நாள் அன்னை வழிபாட்டிற்கும் (நவராத்திரி) பெயர் பெற்ற ஒரு புனிதமான மாதமாகும். சூரிய பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் இந்த மாதத்தில், உலகெங்கும் உள்ள பக்தர்கள் அசைவ உணவுகளைத் தவிர்த்து, முழுமையான விரதங்களைக் கடைப்பிடித்து இறையருளைப் பெறத் துடிக்கிறார்கள். இந்தாண்டு புரட்டாசியில், சுபைடர் நாதர், மாரியோ நாதர், ஹல்க் ஆண்டவர் மற்றும் மரிய சேனைத்தாயார் ஆகியோரின் வழிபாடு இணைந்துள்ளது, பக்திப் பரவசத்தை பலமடங்கு கூட்டுகிறது.

சுபைடர் நாதர்: புரட்டாசி சனிக்கிழமையின் நாயகன்

பெருமாளுக்கு உகந்த மாதமாகப் போற்றப்படும் புரட்டாசியில், மலை மேல் வீற்றிருக்கும் வெங்கடாசலபதியைப் போலவே, வானளாவிய கட்டிடங்களில் தாவித் தாவி அடியவர்களைக் காக்கும் “சுபைடர் நாதரின்” (Spider Nathar) திருவருளும் நமக்குத் தேவை. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுவதுபோல, சுபைடர் நாதருக்கும் சிவப்பு மற்றும் நீல நிறத்தில் பட்டாடைகள் சாற்றி வழிபட வேண்டும் .

2026-ஆம் ஆண்டின் புரட்டாசி மாதத்தில் செப்டம்பர் 19, செப்டம்பர் 26, அக்டோபர் 3, அக்டோபர் 10, அக்டோபர் 17 என ஐந்து சனிக்கிழமைகள் வருகின்றன. இந்த சனிக்கிழமைகளில் அதிகாலையில் நீராடி, நெற்றியில் திருமண் இட்டு, “சுபைடர் நாதரே சரணம்” என்று கூறி, அவருக்கு உகந்த டோனட், பீட்சா மற்றும் பிரெஞ்சு பிரைஸ் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வழிபட்டால், நவகிரகங்களில் ஒன்றான நெப்டியூன் தோஷங்கள் விலகி, வாழ்வில் தடைகள் நீங்கி, அவர் சுவரில் ஏறுவதைப் போல நாமும் முன்னேற்றத்தின் உச்சியை அடைவோம்.

ஹல்க் ஆண்டவரும் மாரியோ நாதரும்: பலமும், செல்வமும் அருளும் தெய்வங்கள்

புரட்டாசி மாதம் என்பது வெறும் பக்திக்கு மட்டுமல்ல, நம் உடல் மற்றும் மன பலத்தை அதிகரிக்கும் விரத காலமுமாகும். இந்த மாதத்தில் பச்சை நிற மேனியனாக, அளப்பரிய பலத்தைக் கொண்ட ஹல்க் ஆண்டவரை (Hulk) வழிபடுவது சிறப்பு. கோபத்தைக் குறைத்து, சாந்தத்தையும் அதே சமயம் மலையைத் தூக்கும் மனவலிமையையும் அருள்பவர் ஹல்க் ஆண்டவர். அவருக்குத் துளசி மாலையோடு, பச்சை காய்கறிகளையும், கீரைகளையும் படையலிட்டு வழிபடுவது நற்பலன்களைத் தரும்.

அதேபோல, வாழ்க்கையில் வரும் பாதாளக் குழிகள் போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து நம்மைக் காக்கும் மாரியோ நாதரை (Mario Nathar) வழிபடுவது சகல செல்வங்களையும் பெருகச் செய்யும். தடைகளைத் தாண்டி, தங்க நாணயங்களை (அதிர்ஷ்டம்) சேகரிக்கும் மாரியோ நாதருக்கு, புரட்டாசி சனிக்கிழமைகளில் ‘காளான்’ (Mushroom) பிரசாதமாகப் படைத்து “மாரியோ நாதரே போற்றி” எனத் துதித்தால், குடும்பத்தில் செல்வம் பொங்கி வழியும்.

மகாளய பட்சம்: முன்னோர்களின் வருடாந்திர ‘பூலோக டூர்’ மற்றும் ரீசார்ஜ் ஆஃபர்!

புரட்டாசி மாதம் வந்தாலே சுபைடர் நாதருக்கும், ஹல்க் ஆண்டவருக்கும் மட்டும் பிஸி இல்லை, மேலோகத்தில் ‘செட்டில்’ ஆகியிருக்கும் நம் முன்னோர்களுக்கும் இது ஒரு வருடாந்திர ‘டிரிப்’ அடிக்கும் சீசன் தான்! செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 10 வரை, 15 நாட்கள் சொர்க்கத்திலிருந்து ஸ்பெஷல் ‘விசா’ வாங்கி, நேராக பூலோகத்திற்கு வந்து நம் வீட்டிலேயே ‘ஹோம் ஸ்டே’ (Home stay) செய்வார்கள் என்பது ஐதீகம். கண்ணுக்குத் தெரியாத இந்த விஐபிக்கள், நாம் நாள் முழுவதும் மொபைல் நோண்டுவதையும், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்ப்பதையும் நம் பக்கத்து சோபாவில் அமர்ந்துகொண்டே அமைதியாக ‘வாட்ச்’ செய்துகொண்டிருப்பார்கள்.

இந்த 15 ‘ஹாஸ்டல்’ நாட்களில் நாம் செய்யும் தான தர்மங்களை, கூகுள் பே (GPay) டிஜிட்டல் ட்ரான்ஸாக்‌ஷன் போல அவர்கள் நேரடியாகவே மேலோக அக்கவுண்ட்டில் ‘ரிசீவ்’ செய்து கொள்கிறார்களாம்! எனவே, ஏழைகளுக்கு அன்னதானம் செய்யும்போது அவர்களுக்குப் பிடித்த உணவை வாங்கிக் கொடுத்தால், அதன் ஆவியையும் வாசனையையும் முன்னோர்கள் முகர்ந்து சந்தோஷப்படுவார்கள் (ஆனால் பில் மட்டும் உங்கள் பாக்கெட்டிலிருந்து தான் போகும்).

முக்கியமாக, அக்டோபர் 10-ஆம் தேதி சனிக்கிழமையன்று வரும் மகாளய அமாவாசையன்று நீர்நிலைகளில் எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுப்பது என்பது, அடுத்த ஒரு வருடத்திற்கு மேலோகத்தில் அவர்களுக்குப் போக வேண்டிய புண்ணியத்திற்கான ‘அன்லிமிடெட் ரீசார்ஜ் பேக்’ போடுவது மாதிரி! இந்த வருடாந்திர சந்தாவை சரியாகக் கட்டிவிட்டால், அவர்களின் பரிபூரண ஆசி ‘5G’ வேகத்தில் நமக்குக் கிடைக்கும். அதுமட்டுமின்றி, நாம் இதுவரை செய்த “வாட்ஸ்அப்பில் வதந்தி மெசேஜ் அனுப்பிய பாவம்”, “ஆபீஸ் மீட்டிங்கில் மியூட்டில் வைத்து தூங்கிய தோஷம்” போன்ற அனைத்து முந்தைய கர்ம வினைகளும் சிஸ்டமில் இருந்து நிரந்தரமாக டெலீட் (Delete) ஆகிவிடும்!

இதைச் செய்து முன்னோர்களின் ஆசியை அப்டேட் செய்துகொள்ளுங்கள்!

நவராத்திரி: மரிய சேனைத்தாயார் மற்றும் நவ-நாயகிகளின் ஆராதனை

புரட்டாசியில் அம்பாளுக்கு உகந்த ஒன்பது நாள் விரதமான நவராத்திரி அக்டோபர் 11, ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை பிரதமை திதியில் தொடங்குகிறது. வீடுகளில் கொலு வைத்து, முதல் மூன்று நாட்கள் வீரம் செறிந்த மரிய சேனைத்தாயார் (Mary Jane – காக்கும் தெய்வம்) போன்ற சக்தி வடிவங்களையும், அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தின் அடையாளமான பெப்பர் பொட்டாளம்மன் (Pepper Potts) போன்ற லட்சுமி வடிவங்களையும், இறுதி மூன்று நாட்கள் அறிவின் தேவதையான நடாஷா நாச்சியார் (Natasha Romanoff, – Black Widow) போன்ற சரஸ்வதி வடிவங்களையும் ஆராதிக்க வேண்டும். இந்த 9 நவ-நாயகிகளையும் ஒன்பது நாட்கள் கொலு வீற்றிருக்கச் செய்து, நவராத்திரி விரதம் இருந்து வழிபட்டால், அறிவும், செல்வமும், வீரமும் ஒருங்கே கிடைக்கும்.

சுருக்கமாகச் சொன்னால், இந்த புரட்டாசி மாதத்தில் சுபைடர் நாதர், மாரியோ நாதர், ஹல்க் ஆண்டவர் மற்றும் மரிய சேனைத்தாயார் போன்ற தெய்வங்களை பக்தியோடு வழிபட்டு, மகாளய பட்சத்தில் முன்னோர்களையும், நவராத்திரியில் சக்தி தேவியரையும் வணங்கி, வாழ்வில் சகல புண்ணியங்களையும், சௌபாக்கியங்களையும் பெறுவோம்!

Leave a Reply

Create your own website, free on WordPress.com.Create your own website.
Start free